Home

Vallalar Picture Key_v2

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
ArutPerunJothi ArutPerunJothi ThaniPerunKarunai ArutPerunJothi!
Thiruchitrambalam

About Vallalar:

Vallalar is a 19th Century Mystic, born on October 5, 1823 in a small village called Marudur, (Cuddalore District, Tamil Nadu State) in Southern part of India. He was named as “Ramalingam” by his parents Ramaiah and Chinnamai and popularly called as “Thiru Arutprakasa Vallalar” or “Vallal Peruman”. Vallalar was a great Tamil Poet and a Scholar. He has written 5818 Poems in Tamil and they are classified as 6 Cannons or “Thirumurai” apart from other prose. 

The philosophy of  Vallalar is known as Samarasa Suddha Sanmargam Samarasa – Harmonious, Sutha – Pure, Sanmargam – Nature Truth Path). According to him, there is only one God in the form of Light and called it as “ARUTPERUNJOTHI” (Vast Grace Light). Saint Vallalar promoted Universal Brotherhood and was against the all the human differences such as Caste, Creed, Religion, Race, Language, Nationality and so on.  His main Precepts are based on “Jeevakarunyam” or Compassion towards all living beings.  Vallalar’s main principle is to attain Godliness and physical immortality through the acts of compassion towards all living beings and scientific Inquiry. He advocates only Vegetarian food and strictly prohibits killing and meat-eating.

 Vallalar had established 4 Institutions which are in Vadalur, Tamil Nadu, India

  1. Sathya Gnana Sabhai – Hall of True Wisdom,
  2. Samarasa Suddha Sanmarga Sathiya Sangam –  The Institution for Unified/Universal Pure Path of Nature Truth,
  3. Sathiya Dharmasalai – Chartiy house to feed the poor
  4. Sidhi Valagam – Sacred Mansion of Miracle.

In 1873,  Vallalar hoisted the Sanmarga Flag and delivered his important speech known as “Mahobadesam” or “ Perubadesam”  or “Great Sermon”.  He also revealed the Maha Mantra – 

” ArutPerunJothi ArutPerunJothi ThaniPerunKarunai ArutPerunJothi!” 

 On Jan 30th 1874, Vallalar locked himself in his Sacred Mansion called “Sidhi Valagam” and asked his followers not to open the door and disappeared. The door was opened later by the Government authorities and found no clues. His disappearance was registered in the South Arcot District’s ‘The Madras District Gazetteer’.

Prayer (In Tamil)

பொது பிரார்த்தனை

  1. இயற்கை உண்மையரென்றும்,
  2. இயற்கை அறிவினரென்றும்,
  3. இயற்கை இன்பினரென்றும்,
  4. நிர்க்குணரென்றும்,
  5. சிற்குணரென்றும்,
  6. நித்தியெரென்றும்,
  7. சத்தியரென்றும்,
  8. ஏகரென்றும்,
  9. அநேகரென்றும்,
  10. ஆதியரென்றும்,
  11. அனாதியரென்றும்,
  12. அமலரென்றும்,
  13. அருட்பெருஞ்ஜோதியரென்றும்,
  14. அற்புதரென்றும்,
  15. நிரதிசயரென்றும்,
  16. எல்லாமான வரென்றும்,
  17. எல்லாமுடைய வரென்றும்,
  18. எல்லாம் வல்லவரென்றும்,
    குறிக்கப்படுதல் முதலிய அளவு கடந்த திருக்குறிப்பு திருவார்த்தைகளாற் சுத்த சன்மார்க்க ஞானிகள்துதித்தும், நினைத்தும், உணர்ந்தும், புணர்ந்தும், அனுபவிக்க விளங்குகின்றதனித்தலைமை பெரும் பதியாகிய பெருங்கருணை கடவுளே!”

தேவரீரது திருவருட் சமூகத்தில் துரும்பினும் சிறியோமாகிய யாங்கள் சிற்றறிவாற் செய்து கொள்ளும் சிறு விண்ணப்பங்களைத் திருச்செவிக்கேற் பித்தருளி யெங்களை இரஷித்தருளல் வேண்டும்.

எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.

இணை ஏதும் இன்றி நின்ற இறையவனே மறை சொல் ஏகமுமாய் அனேகமுமாய் இலங்கு பரம் பரனே

சத்திய ஞானானந்த தனித்தலைமை கடவுளே!

  1. காம உட் பகைவனும்,
  2. கோப வெங் கொடியனும்.
  3. கனலோப முழு மூடனும்,
  4. கடுமோக வீணனும்,
  5. கொடுமதம் எனும் துட்ட கண்கெட்ட ஆங்காரியும்,
  6. ஏமம்அறு மாச்சரிய விழலனும்,
  7. கொலை என்று இயம்பு பாதகனுமாம்,  

இவ் எழுவரும் இவர்க்கு உற்ற உறவான பேர்களும், எங்களை பற்றிடாமல் அருள்வாய்

எங்கள் கதியே எங்கள் கண்ணே எங்கள் கண்மணியே எங்களது

கருத்தே எங்கள் கருத்தில் உற்ற கனிவே செங் கனியே

உலகமெங்கும் அமைதி நிலவவும், அருட்செல்வம் பொருட்செல்வம் பெறுகவும்,

இந்த பூமியில் சுற்றுப்புறச்சூழலின் தூய்மை தரம் மேம்படவும்,

உலக தலைவர்வர்கள் மனதில் ஆன்மநேய ஒருமைபாட்டுரிமையும் அளவிலா கருணை உள்ளம் ஓங்கவும்,

உலகர் அனைவரும் துன்பம் கழு பிணி இல்லாத வாழ்வு பெறவும்,

உலக பொருளாதாரம் சீர்பெறவும்,

தொழிளாலர்களின் தொழிள் முன்னேறவும்

பணியாளர்கள்  / ஊழியர்கள் வேலைகளில் நன்னிலையில் நிலைக்கவும் முன்னேறவும், அவரவர் பணிகளில் சிறக்கவும்

பயணிகள் பாதுகாப்பாக பயணிக்கவும்  

இயற்க்கை செயற்கை சீற்றங்களால் மக்கள் அவதிப்படாமல் இருக்கவும் 

குழந்தைகளின் கல்வி சிறக்கவும்

அனைவரின் ஆரோக்கியம் தன தான்யம் பெருகவும்,

இறைவா நின் திருவடி போற்றி பணிந்து விண்ணப்பிக்கின்றோம்

இந்த விண்ணப்பத்தை படிக்கும் அனைவரும் அவர்களின் குடும்பத்தாரும் மற்றும் உலகில் உள்ள அனைத்து உயிர்களும்

கல்வியில் கேள்வியில் கடலினும் சிறந்து
அன்பறி வொழுக்கம் அமைந்து குடும்பத் துடனே
தீர்க்க ஆயுளும் செல்வப் பெருக்கும்
நோயற்ற வாழ்வும் நுவலரும் கீர்த்தியும்
சிவம் திகழ் ஞானமும் சித்தியும் பெற்று
மகிழ்து அருட் துணையால் வளம்பெற

இறைவா நின் திருவடி போற்றி பணிந்து விண்ணப்பிக்கின்றோம்

தேவரீர் இச்சபையிலே அமர்ந்தருளி அற்புதத் திருவருள் விளக்கத்தால் எங்களையும் இவ்வுலகில் இத்தேகத்தைப் பெற்ற மற்றவர்களையும் உண்மைக்கு அடியவர்களாக்கி, உண்மை அறிவை விளக்கி, உண்மை இன்பத்தை அளித்து, சமரச சுத்த சன்மார்க்க நிலையில் வைத்து சத்திய வாழ்வை அடைவித்து நித்தியர்கள் ஆக்கி வாழ்வித்தல் வேண்டும்.

திரு ஓங்க, ஆண்டவர் அருள் ஓங்க, வள்ளலார் ஒளி நெறி ஓங்க, தெள்ளிய தமிழும் ஓங்க, புண்ணியச் செயல் ஓங்க, உயர் புகழ் ஓங்க, செல்வம் ஓங்க, அறிவு ஓங்க, இந்த மனை ஓங்க, மக்கள் ஓங்க, இந்த நாடு ஓங்க, உலகம் ஓங்க, நிறைவான இன்பம் ஓங்க, வளர் கருணை ஓங்க, அமுது வயம் ஓங்க, உள்ளம் ஓங்க, அன்பு ஓங்க, ஞானம் ஓங்க, ஒளி ஓங்க, வளம் ஓங்க அனைவரும் சகல ஐஸ்வரியங்களுடன் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் தடைபடாமல் பெற்று வாழ குருவருளையும் திருவருளையும் வேண்டி மலரடி பணித்து விண்ணப்பிக்கின்றோம்

தேவரீர் பெருங்கருணை ஆட்சிக்கு வந்தனம் வந்தனம் வந்தனம்!

வந்தருள் புரிக விரைந்து இது தருணம் மாமணி மன்றிலே ஞான

சுந்தர வடிவச் சோதியாய் விளங்கும் சுத்த சன்மார்க்க சற் குருவே

தந்தருள் புரிக வரம் எலாம் வல்ல தனிஅருட் சோதியை எனது (எங்களது)

சிந்தையில் புணர்ப்பித்து என்னொடுங் (எங்களோடு) கலந்தே செய்வித் தருள்க செய் வகையே

திரு நிலைத்து நல் அருளொடும் அன்பொடும் சிறப்பொடும் செழித்தோங்க

உரு நிலைத்து இவண் மகிழ்வொடு வாழ்வுற உவந்து நின் அருள்செய்வாய்

இரு நிலத்தவர் இன்புறத் திருவருள் இயல்வடி வொடுமன்றில்

குரு நிலைத்த சற்குரு எனும் இறைவ நின் குரைகழற் பதம் போற்றி.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

வள்ளல் மலரடி வாழ்க வாழ்க !

திருவருட் பிரகாச வள்ளலார் திவ்ய திருவடிகளே

சரணம் ! சரணம் ! சரணம் !

அருட்பெருஞ்சோதி அபயம் அபயம் அபயம்!